நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி கோர விபத்து... நடத்துநர் பலி!

 
அரசு பேருந்து

 

திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியில் இன்று அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில், பேருந்து நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி காய்கறிகள் ஏற்றிச் சென்ற லாரி, மேல்செங்கம் அருகே பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் டயர் பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆம்புலன்ஸ்

அப்போது பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, அதிகாலை நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நின்றிருந்த லாரியைக் கவனிக்காமல் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், நடத்துநர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (57) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளைப் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நடத்துநரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய மேல்செங்கம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்