அக்.22ல் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - கலெக்டர் உத்தரவு!

 
விடுமுறை பள்ளி மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஷேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 725-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்

தர்கா விழாவின் முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு, வரும் அக்டோபர் 22-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் அக்டோபர் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) வழக்கமான வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தஞ்சை

அதே போன்று அக்டோபர் 22ம் தேதி ராஜ ராஜ சோழனின் சதய விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.