10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு! மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் 2026–2027 கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை இன்று (அக்டோபர் 14) வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு அட்டவணையை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் பொதுத்தேர்வுகள் 2027-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும், தேர்வுகள் தொடங்கும் நாள் மற்றும் நிறைவடையும் நாள் எது போன்ற விவரங்கள் கால அட்டவணையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் காலம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெறலாம். மாணவர்கள் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கால அட்டவணை வெளியானதும், அதற்கேற்ப பாடங்களைத் திட்டமிட்டு படிப்பது பொதுத்தேர்வுக்குத் தயாராக உதவும்.
