TN BUDGET 2026-27: தமிழக அரசின் ஒரு ரூபாய் வரவு மற்றும் செலவு கணக்கு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைப் பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 'ஒரு ரூபாய் கணக்கில்' அரசின் நிதி வரவு மற்றும் செலவுப் பகிர்வை பார்க்கலாம். 

ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது? (செலவுப் பகிர்வு)
உதவித் தொகைகளும் மானியங்களும்: 33.2 பைசா

ஊழியர்களின் சம்பளங்கள்: 17.3 பைசா

வட்டி செலுத்துதல்: 15.0 பைசா

மூலதனச் செலவு : 10.9 பைசா

கடன்களை திருப்பிச் செலுத்துதல்: 9.9 பைசா

ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள்: 8.0 பைசா

செயல்பாடுகளும் பராமரிப்புகளும்: 3.8 பைசா

கடன் வழங்குதல்: 1.9 பைசா

ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது? (வரவுப் பகிர்வு)
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்: 43.3%

பொதுக்கடன்: 33.1%

ஒன்றிய வரிகளின் பங்கு: 11.9%

ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்: 6.3%

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய்: 5.3%

கடன் வசூல் மற்றும் மூலதன வரவு: 0.1%