ஓம் சக்தி, பராசக்தி, அரசுப் பேருந்து LED திரையில் திமுகவுக்கு எதிரான வாசகங்கள்... வைரல் வீடியோ!
Oct 14, 2026, 17:35 IST
புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்புற LED திரையில், அரசியல் கருத்துகள் அடங்கிய வாசகங்கள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஓம் சக்தி பராசக்தி”, “திமுக ஒரு தீய சக்தி”, “கொளத்தூர் கொத்து பரோட்டா” உள்ளிட்ட வாசகங்கள் திரையில் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
வாசகங்களைப் பதிவேற்றியது யார்? விசாரணை
பேருந்தின் LED திரையில் இந்த வாசகங்கள் இடம்பெற்றதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அரசுப் பேருந்தில் அரசியல் வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டிருப்பது குறித்து கவனம் எழுந்துள்ள நிலையில், அவற்றை யார் பதிவேற்றம் செய்தார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தெரியவரும்.
