அரசு ஊழியர்கள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு!

 
அரசு

 

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தமிழக அரசு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 2025-ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை IFHRMS இணையதளம் வாயிலாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

தமிழக அரசு ஊழியர்கள்

இதனைத் தொடர்ந்து, காலக்கெடுவை டிசம்பர் 31, 2026 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 2025-ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை அந்தத் தேதிக்குள் ஊழியர்கள் தாக்கல் செய்யலாம்.

மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கான சொத்து மற்றும் கடன் விவரங்களையும் மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

அனைத்து துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அலுவலர்கள், தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த கால நீட்டிப்பு குறித்து தெரிவித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் விவரங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.காலக்கெடுவுக்குள் விவரங்களைத் தாக்கல் செய்யாதவர்கள் அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.