அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! செப்.25-ம் தேதியே சம்பளம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

 
செப்டம்பர்

 

செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் வெளியிட்ட உத்தரவின்படி, செப்டம்பர் மாதத்திற்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை செப்டம்பர் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை முன்கூட்டியே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாதுகாப்புத்துறை, தபால் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

தமிழக அரசு

செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதால், மாத இறுதியில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வரவு வைப்பதில் ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.செப்டம்பர் 25-ம் தேதி வழங்கப்படும் சம்பளம், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டிய தொகையாக கருதப்படும். மாத இறுதியில் சம்பளக் கணக்கீட்டில் ஏதேனும் சரிசெய்தல் தேவைப்பட்டால், அது அக்டோபர் மாத சம்பளத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகம் அரசு  ஊழியர்கள்

மேலும், வங்கி வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், செப்டம்பர் மாத சம்பளம் வழக்கமான மாத இறுதி நாட்களுக்கு முன்பாகவே கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும், இந்த முன்கூட்டிய சம்பள வழங்கல் குறித்த தகவல் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.