அரசுப் பணி தேர்வர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டு கூடுதல் சலுகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

 
டிஎன்பிஎஸ்சி

 

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், நேரடி நியமனங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

இந்தச் சலுகை, பிற்படுத்தப்பட்டோர் (BC), பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்கள் (BC(M)), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC), பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST), ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கனவே வழங்கப்படும் வயது தளர்வுடன் கூடுதலாகக் கிடைக்கும்.

தமிழ்நாடு

புதிய வயது உச்சவரம்பு உயர்வு அக்டோபர் 30-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சலுகை ஐந்து ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வயது வரம்பு காரணமாக அரசுப் பணித் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்த பல ஆயிரம் இளைஞர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.