2 ஆண்டுகளுக்கு பிளாஸ்டிக், ரசாயனம் இல்லாத சானிட்டரி நாப்கின்கள்... தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு

 
நாப்கின்

 

தமிழ்நாட்டு பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் இல்லாத, மண்ணில் மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி நாப்கின்களை இரண்டு ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் டெண்டர் அறிவித்துள்ளது.

Free Sanitary Napkin,இலவச நாப்கின்: தமிழக அரசு ரூ.44 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு! - tn govt allocate 44 crore for free sanitary napkin under menstrual health scheme - Samayam Tamil

இந்த நாப்கின்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராமப்புற பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4,000 கோடி செலவாகும் என தமிழக அரசு கூறியுள்ளது, ரேஷன் கடைகள் மூலம் சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளது.

பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதுடன், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.