2,251 அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சி! தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

 
அரசு

 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களை (SMC) வலுப்படுத்தவும் 2,251 அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெற உள்ளன. இதற்காக ரூ.8,66,740 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SMC Guidelines 2026: Roles, Responsibilities & Functions – RIJADEJA.com

இந்தப் பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகள், அவற்றின் பொறுப்புகள் மற்றும் பள்ளி வளர்ச்சியில் குழுக்களின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து தலைமையாசிரியர்களும் காலை 9 மணிக்குள் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தர வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் ஆசிரியை பேராசிரியர்

அரசுப் பள்ளிகளில் பெற்றோர் மற்றும் சமூகத்தினரின் பங்களிப்பை அதிகரித்து, பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், அவற்றை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றும் நோக்கில் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.