தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடலோர ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை (Orange Warning) விடுத்துள்ளது.
இதேபோல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்ட், குஜராத், கொங்கன், கோவா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமான பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 12 ம் தேதி இஅன்று பல்வேறு மாநிலங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.
-
ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம்: ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பரவலான மழையுடன் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பா பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்: மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
தென் மாநிலங்கள்: தெலங்கானா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் பரவலான மழையுடன் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
-
வட மாநிலங்கள்: உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையும், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (NCR) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-

சில பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் இதர பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
