TNPL இறுதிப்போட்டி.. மதுரையை வீழ்த்தி கோவை சாம்பியன்!

 
TNPL  மதுரை கோவை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 10-வது டிஎன்பிஎல் 2026) இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரி சித்தார்த் 47 பந்துகளில் 82 ரன்கள் (5 சிக்சர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார்.

டிஎன்பிஎல்

183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணி, கோவை அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் என்.எஸ். சதுர்வேத் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்த போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

டிஎன்பிஎல்

முடிவில், கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. மதுரை தரப்பில் பந்துவீச்சில் சரவணன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கோவை அணியின் தரப்பில் ஷாருக் கான் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.