செப்.14 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்... ஹால் டிக்கெட் ரெடியாயிடுச்சு... எப்படி பதிவிறக்கம் செய்வது? முழு விவரங்கள்!
அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மக்கள் தமிழக அரசு தேர்வுகளில் மட்டுமே அதிகளில் அக்கறை செலுத்துகின்றனர். நிறைய மத்திய அரசு தேர்வுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அல்லது அது குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். முறையாக மத்திய அரசு தேர்வுகளையும் எழுதினால், நிச்சயம் வேலைவாய்ப்பு பிரகாசமானதாக இருக்கும். தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்தில் 215 தாலுகா தேர்வு நடைபெறும், சென்னையில் மட்டும் 2763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, சான்றிதழ்களில் திருத்தங்கள், சேதங்களை ஏற்படுத்துதல், போலியாக சமர்ப்பித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா