டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு.. 57,612 பேர் ஆப்சென்ட் - 2 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு!

 
இன்னும் ஒரு நாள் தான்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வு வருகைப் பதிவு மற்றும் முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வின் மூலம் துணை கலெக்டர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஆரம்பத்தில் 26 ஆக அறிவிக்கப்பட்டு, பின்னர் 20 இடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 46 பணியிடங்களாக உயர்த்தப்பட்டது.

குரூப் தேர்வு டிஎன்பிஎஸ்சி

தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்து 440 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்று நடைபெற்ற தேர்வில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 828 பேர் (74.22 சதவீதம்) கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதாமல் மொத்தம் 57 ஆயிரத்து 612 பேர் (25.78 சதவீதம்) ஆப்செண்ட் ஆகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 754 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் தேர்வு

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், இறுதி முடிவுகள் வெளியாகும் கட்டத்தில் கூடுதல் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.