TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு - ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வு எப்போது?

 
 ஜூலை 12ம் தேதி குரூப் 4 தேர்வு... 3935 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பணிகளில் மிக உயரிய பதவிகளாகக் கருதப்படும் துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் தேர்வு தேதிகள் குறித்த முழு விவரங்களைத் தேர்வாணையம் தற்பொழுது அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I பணிகளுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 29ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (tnpsc.gov.in) வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் தேர்வு

இந்தத் தேர்வின் மூலம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்டப் பதிவாளர், தொழிலாளர் நல உதவி ஆணையர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்ப செயல்முறைகள் முடிந்த பிறகு, இதற்கான முதல்நிலைத் தேர்வு நடப்பு ஆண்டின் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வுக்குத் தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அடங்கிய விரிவான அறிவிப்பு ஜூன் 30ஆம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.