டிஎன்பிஎஸ்சி குரூப் 1க்கான ஹால்டிக்கெட் வெளியீடு!! பதிவிறக்கம் செய்யும் முறை!!

 
டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுகள் ஆகஸ்டு 10 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான  ஹால் டிக்கெட்  தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேர்வர்கள் http://www.tnpscexams.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

அதில்  ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு  மூலம்  நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு ஆகஸ்ட் 10 காலை  முதல் மற்றும் ஆகஸ்ட் 13 முற்பகல்  வரை நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்வு சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி

இவை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in இவைகளில்   பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு எண்ணை பதிவிட்டு அத்துடன் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web