டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விண்ணப்பங்கள், தேர்வு தேதி ... முழு தகவல்கள்!

 
டிஎன்பிஎஸ்சி

 தமிழகத்தில் அரசுப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் துறைவாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான  குரூப் 1 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்   இன்று அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ 
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்1 பணியிடங்களை பொறுத்தவரை  முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி

அந்த வகையில், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான  நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்  ஏப்ரல் 27ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு  ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது “ எனத் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web