TNPSC குரூப்-4 தேர்வு - 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 10-ஆம் தேதி குரூப்-4 எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

இம்முறை மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கும்.

தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
