’ டிஎன்பிஎஸ்சி டெலிகிராம் சேனல்’ தொடக்கம்... தேர்வர்கள் வரவேற்பு!
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு போட்டித் தேர்வுகளும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு குறித்த அறிவிப்புகள், எழுதிய தேர்வுகளின் முடிவுகள் https://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்த தகவல் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலும் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் தேர்வர்கள் பார்த்து தகவல்களை அறியலாம். இந்நிலையில் தற்போது டெலிகிராம் சேனல் பக்கத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடங்கி உள்ளது. இதற்கு தேர்வர்கள் பலரும் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். டெலிகிராம் பக்கத்தில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ள https://x.com/TNPSC-Office என்ற எக்ஸ் தளப்பக்கத்துக்கு சென்று அதில் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யலாம்.
உடனடியாக உங்கள் இணைப்பு டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும். அதில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் சேனல் மூலம் தேர்வுகள், தேர்வு முடிவுகள் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!