வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்க இதனை மட்டும் செய்து பாருங்க!!

வீட்டில் நேர்மறை சக்திகள் பெருக ஆகாச கருடன் கிழங்கை இங்கே கட்டி விடுங்க!!
 
ஆகாச கருடன் கிழங்கு


என்ன தான் சம்பாதித்தாலும் பணம் தண்ணீராய் செலவழிந்து விடுகிறது. வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடு, கணவன் மனைவி கருத்து வேறுபாடு என தொடர்ந்து கொண்டே இருக்கிறதா? வீட்டில் நேர்மறை சக்திகள் பெருகவும், அமைதி அதிகரிக்கவும் ஆகாச கருடன் கிழங்கை வீட்டின் தலை வாயிலில் கட்டி விடலாம். இந்த கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.  ஆகாசக் கருடன்  கிழங்கு வைத்திருக்கும் வீட்டில் விஷ ஜந்துக்கள் வராது.

positive vibe
விஷ ஜந்துக்கள் மட்டுமல்ல மற்ற எந்த ஒரு கெட்ட சக்தியும் வராது. அப்படியே வந்தாலும்  இந்த கிழங்கு ஈர்த்துக்கொண்டு காய்ந்துவிடும்.
எத்தனை கொடுமையான நோயையும் இந்த கிழங்கு கொல்லக்கூடிய திறன் வாய்ந்தது. இதற்கு கொல்லன் கோவை என்ற சிறப்பு பெயரும் உண்டு.

வீட்டில் நல்ல சக்திகள் இருக்கும் நிலையில் முளைவிட்டு பசுமையான கொடிகளாக வளரும் அற்புதத்தையும் காணலாம். கிழங்கில் பசுமை தன்மை இருக்கும் வரை  இல்லத்தில்  மகிழ்ச்சி பெருகும்.

eagle
இதுதவிர நமக்கு  எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகளை ஆகாச கருடன் தன் உயிரைக் கொடுத்து நம்மை காக்கும். அதாவது கெட்ட சக்தி அதிகமாக இருந்தால் அழுகிவிடும். வீட்டில் வைத்ததற்கு பிறகு அழுகிப் போனால் உடனடியாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி, வீட்டில் பூஜை செய்து வேறொரு ஆகாச கருடன் கிழங்கை கட்டிவிடலாம். வீட்டில் ஆகாச கருடன் கிழங்கு இருப்பது கருடன் இருப்பதற்கு சமம்.இதை உணர்ந்து வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ ஆகாச கருடன் கிழங்கை வீட்டில் கட்டி வைப்போம். மன அமைதி பெறுவோம்.