மக்களின் கவனத்திற்கு.. மீண்டும் இயங்கும் ஆம்னி பேருந்து.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்..!

 
ஆம்னி பேருந்து

ஆறு மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என  தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில்  வட்டாரப் போக்குவரத்து துணை ஆணையருடன் ஆன பேச்சு வார்த்தையை தொடர்ந்து  தங்களது அறிவிப்பை திரும்ப பெறுவதாக தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனஎர்.

சென்னை கே.கே.நகரில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் முத்து உடன் தென் மாநில ஆம்னி உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் மாநில ஆம்னி கூட்டமைப்பு சங்க தலைவார் அன்பழகன் செய்தியாளர்கள்  சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Read all Latest Updates on and about ஆம்னி பஸ்கள்

இன்று மாலை அறிவிக்கப்பட்டிருந்தது ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நாங்கள் வைத்த மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். எந்த தவறும் செய்யாத வாகனங்களை இடையில் வழிமறித்து பயணிகளுக்கு இடையூறு செய்ய கூடாது என மொத்தம் மூன்று கோரிக்கைகள் முன் வைத்தோம்.  கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் ஏற்று கொண்டதால் எங்களின் போராட்டத்தை வாபஸ் வாங்கி நல்ல முறையில் எங்கள் பயணிகளுக்கு சேவை செய்ய உள்ளோம் என தெரிவித்து கொள்கிறோம் , எப்போதும் போல் வாகனங்கள் ஓடும் என தெரிவித்தார்

மேலும் அதிகாரிகளிடம் தவாரக பிடிக்கப்படிருந்த வாகனங்களை சுட்டிகாட்டி  முறையாக வரி செலுத்தப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரிக்கை அளித்தோம்,  பிடிக்கப்பட்ட வாகனங்களை முறையான அனுமதி இறந்தால் விடுவிக்கப்படும் என உத்திரவாதம் அளித்துள்ளனர். கோரிக்கையாக தவறுதலாக சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்க வேண்டும் , தவறு இல்லாமல் வாகனங்களை சிறைபிடிக்க கூடாது என விடுத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்” - தமிழ்நாடு ஆம்னி பேருந்து  உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு | omni buses will operate as usual in Tamil  Nadu today ...

தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட உரிமம் கொடுக்கப்படவில்லை, ஆகையினால் தற்காலிகமாக வெளி மாநிலங்களில் உரிமம் வாங்கிருந்தோம் தற்போது தமிழகத்திலேயே உரிமம் பெற்று கொண்டு உள்ளோம் , மேலும் இன்னும் சிறிது காலத்தில் அனைவரும் தமிழகத்தில் உரிமம் பெற்று கொள்வோம் என தெரிவித்தார். வருடத்திற்கு ஒரு முறைஅனைத்து சங்கங்களும் ஒன்று கூடி முடிவு எடுத்து தீபாவளி கட்டணங்களை வெளியிடுவோம் , குறிப்பிடப்பட்ட கட்டனங்களுக்கு மேலாக வசூலிக்கப்பட்டால் வசூல் செய்த பேருந்தின் மீது புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டனர்

From around the web