இன்று நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் - வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சேவைகள்!

 
ஸ்டேட் பாங்க் எஸ்.பி.ஐ. வங்கி

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU சார்பில் நாளை செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் நலன் கருதி இன்று நாடு முழுவதும் செப்டம்பர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் 27 ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை நாட்களாக அமைந்த நிலையில், வேலைநிறுத்தமும் சேர்ந்து வங்கிச் சேவைகள் தொடர்ந்து 5 நாட்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு அனுமதியின்படி, அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளும் இன்று ஞாயிற்றுக்கிழமையிலும் வழக்கம்போல் செயல்படுகின்றன.

இன்றைய தினம் வங்கிக் கிளைகள், வங்கி அலுவலகங்கள், ஏடிஎம்களுடன் இணைக்கப்பட்ட கிளைகள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் ஆகியவை முழுமையாகச் செயல்படும். எனவே வாடிக்கையாளர்கள் கிளைகளுக்கு நேரில் சென்று தங்களது அவசர வங்கிப் பணிகளைத் தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

வங்கி

எச்டிஎப்சி வங்கி போன்ற சில தனியார் வங்கிகளும் இன்று செயல்படும் என அறிவித்துள்ளன. எனினும், தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கிளைகள் திறந்திருப்பதை அந்தந்த வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதி செய்துகொள்வது சிறந்தது.