இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
school rain

இந்தியாவில் தென்கிழக்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவிலும் தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain


கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் உத்திரபிரதேசம், குஜராத், காஷ்மீர், டெல்லி  உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை


குறிப்பாக தெலங்கானா மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்  அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழை   ஜூலை 27  வரை  தொடரும் என தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல், விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி, மெஹபூப்நகர், நாகர்கர்னோல், சித்திபேட், ஜங்கான், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.  இந்நிலையில், தெலுங்கானாவில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மாநிலம் முழுவதும் இன்றும்  நாளையும் அனைத்து  பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web