முதல்வர் விஜய்யின் இன்றைய திருச்சி பயணம், ரோடு ஷோ திடீர் ரத்து!

 
விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. பாபுவின் மறைவையொட்டி முதல்வரின் இன்றைய திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோடு ஷோ, ரூ.134 கோடி மதிப்பிலான மருத்துவமனை திறப்பு' - முதல்வர் விஜய்யின் திருச்சி விசிட் அஜெண்டா | chief minister joseph vijay trichy visit update - Vikatan

முன்னதாக முதல்வர் திருச்சியில் 16 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை சந்திக்கவும், புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.134.59 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 6 தளங்கள் மற்றும் 600 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்தைத் திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. 

நவ.20ல் திருச்சியில் முதல்வர் விஜய் – மருத்துவமனை திறப்பு, ரோடு ஷோ!

தொடர்ந்து சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.