அட்ரா சக்க. தாறுமாறாக சரிந்த தங்கம்... நகைப்பிரியர்கள் உற்சாகம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ20 குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5810க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ77க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ77000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை குழந்தை பிறப்பு முதல் காதுகுத்து, சடங்கு, கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு என அனைத்து சுபநிகழ்வுகளுக்கு தங்கம் வாங்குவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருந்து வருகிறது. ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருமணம் நகை கொடுக்கும் நமது பாரம்பரியம் ஆபத்து காலங்களில் கை கொடுப்பதற்கும் உதவும் என்கிறது பாட்டி காலத்து சொலவடை. தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கவும் அதனை மாற்று முதலீடாக்கும் வகையில் தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்த போதிலும், தங்கம் விற்பனை குறையவில்லை. உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய சமயத்தில் சரிந்த தங்கம் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்பட்டாலும் காரட் குறைய குறைய அதன் உறுதித் தன்மை அதிகரிக்கும் என்கின்றனர் நகை வியாபாரிகள் 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகங்களும் கலந்தவை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!