தங்கம் அதிரடி உயர்வு... ஹோலிப் பண்டிகையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம்

 சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான மதிப்பை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு 20 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூரூ.6,205-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ80.80க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ ரூ.80,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 தங்கம்

 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், மேலும் உயரவே வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பங்குசந்தையின் தொடர் சரிவு இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் மக்களை தங்கம் எப்போதும் கவர்ந்திழுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புகிறார்கள். தங்கத்தைப் பற்றிய ஏராளமான கதைகளை கேட்டிருக்கலாம். ஆனால், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் ஏராளமான தங்கம் பூமியில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? பூமியில் இன்னும் 80 சதவிகித தங்கம் கண்டறியப்படாமல் உள்ளது என்று கூறும் பல ஆய்வுகள் வந்துள்ளன. அப்படியானால், அந்த தங்கம் எங்கே? தங்கம் எங்கிருக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!
ஆனால், தங்கத்திற்கான‌ தேவை அதிகமாக இருந்தாலும் அதற்கான அழுத்தத்தை இந்தியாவில் காண முடியாது. ஏனெனில் போதுமான தங்கம் சந்தையில் கிடைத்தபடி இருக்கும். தங்க நாணயங்கள், தங்க கட்டிகள், நகைகள் போன்ற வடிவங்களில் உலகில் நிறைய தங்கம் கிடைக்கிறது. அந்த தங்கத்தை உருக்கிக் கொள்ளலாம். எனவே, தங்கத்திற்கு பற்றாக்குறை எதுவும் ஏற்படாது. ஆபரணத் தங்கம் வேறு உலோகங்களோடு கலந்து தயாரிக்கப்படுவதால், அதில் சுத்தமான தங்கம் எவ்வளவு என்பது போன்ற கேள்வி நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web