மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் ... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தங்கம் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த நிலையில், மேலும் விலை குறையும் என்று காத்திருந்த பெண்கள், இன்று தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய காலை நேர விலை நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் நிலவி விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் சமீபமாக தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சம் வரையில் எகிறும் என்று பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியளிக்கிறார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.56 ஆயிரத்து 760-க்கு விற்பனையான நிலையில் இன்று காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
