வாரத்தின் முதல் நாளில் உற்சாகம்... தாறுமாறாக சரிந்த தங்கம்!
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்க நகை உயர்வு காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தை மாதம் பிறந்து முகூர்த்த நாட்களில் அதிக அளவிலான திருமணங்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிட்டவர்களுக்கு கூடுதலாக பல லட்சங்கள் ஒதுக்க வேண்டிய நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அதன் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ 5000 அளவிற்கு அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வானது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் படி ஒரு சவரன் 2025க்குள் சவரன் விலை ரூ80000ஐ தொடலாம் என தங்க நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை கூறி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7555 க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ60440 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையானது குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ15 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7540க்கும், சவரனுக்கு ரூ 120 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 60320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
