மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) மீண்டும் உயர்ந்துள்ளது.சமீபத்திய விலை மாற்றங்களைப் பார்க்கும்போது, அக்டோபர் 22-ஆம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.3,680 குறைந்து ரூ.92,320-க்கும், அக்டோபர் 23-ஆம் தேதி ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனையானது. அதன் பிறகு, வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்து விலை சரிந்து, பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.91,200-க்கும், கிராம் ரூ.11,400-க்கும் விற்பனையாகியது.

ஆனால் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் முதலீட்டாளர்கள் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ11500க்கும், சவரனுக்கு ரூ800 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 92000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ170க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ170000க்கும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.
