இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை... மஞ்சள் அலர்ட் அறிவித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மழை விடுமுறை

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோயம்புத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் 6.5 செ.மீ. முதல் 11.5 செ.மீ. வரையிலான கனமழை எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் இருந்து ஈரப்பதமான காற்று வீசுவதே இந்த மழைப்பொழிவுக்குக் காரணமாகும்.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

இன்று நவம்பர் 29 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கனமழை விடுமுறை பள்ளிகள் குடை வெள்ளம் மழை

வரும் டிசம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.