இன்று அன்னையர் தினம்... அன்னையர் குறித்து அறிஞர்களின் மொழிகள்!

 
அன்னையர் தினம் அம்மா அன்னை தாய் அன்னையர் தினம் அம்மா அன்னை தாய்

இன்று உலகம் முழுவதும்  மதர்ஸ் டே கொண்டாடி வருகிறோம். செல்போனில் வாழ்த்துக்களையும், ஸ்டேட்டஸ்களையும் மட்டுமே வைத்து வாழ்த்துக்களைப் பரிமாறாமல் உங்கள் அன்னையை நிஜமாகவே கொண்டாடுங்கள். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடுகிறோம். இந்நாளில் இருந்தாவது நாம் அனைவரும், நம்மை ஈன்றெடுத்த அன்னையை அன்போடு இறுதிவரை காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.

மனிதகுலம் தோன்றி சமூக வாழ்வு தொடங்கும்போது தாய்வழிச் சமூகமாகத் தான் தொடங்கி நடைபெற்று வந்துள்ளது.

அன்னையர் தினம் தாய் அன்னை

தாயின் பெருமை என்பது எல்லோரும் அறிந்ததுதான். தன் குழந்தைகளுக்காக பசி, தூக்கம், விரும்பும் உணவு, தன் சுகம் என அனைத்தையும் தியாகம் செய்து வளர்த்தெடுக்கிறாள். அதனால்தான் அனைத்தையும் துறந்த பட்டினத்தார் தாய்ப் பாசத்தை துறக்க முடியாமல்,

“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலைத் தந்தாளை இனி
எப்பிறப்பில் காண்பேனோ!”

“தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்”

-பூவை செங்குட்டுவன்.


கன்னித் தமிழும் கன்றின் குரலும்
சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா,
கருணை தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா.. அம்மா”

-கவியரசர் கண்ணதாசன்.

எவள் இல்லையென்றால் நீ பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்துவிட்டால் மீண்டும் அடைய முடியாதோ, அவளே உன் வாழ்க்கைத் தத்துவங்களை துவக்கி வைக்கிறாள். அவள்தான் உன் தாய்

-விவேகானந்தர்.

அன்னையர் தினம் தாய் அன்னை

அன்னை என்பது மானுடம் அல்ல
அதுதான் உலகத்தின் தெய்வீகம்
வேதம் என்பது வேறெதுவும் அல்ல
தாயவள் கூறிய உபதேசம்
விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல
அதுதான் தாயின் மலர்ப்பாதம்

-புலமைப்பித்தன்