இன்று ராஜராஜ சோழன் சதய விழா... சோழர் அருங்காட்சியகப் பணியைத் தொடர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 
ராஜ ராஜ சோழன் சதய விழா

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழாவை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விழா: நீர் மேலாண்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் ஈடு இணையற்ற கட்டடக்கலை ஆகியவற்றில் வரலாற்றில் முத்திரை பதித்த மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை திமுக ஆட்சி காலத்தில் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.56 கோடியில் தொடங்கப்பட்ட சோழர் அருங்காட்சியகப் பணியைத் தவெக அரசு தனது குறுகிய பார்வையில் ரத்து செய்துவிடாமல், உடனடியாகத் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.