இன்று ரத ஸப்தமி... செல்வாக்கும், செல்வமும் சேர குளிக்கும் போது இதை மறக்காம பண்ணுங்க!

 
ரத சப்தமி

இன்று புண்ணியம் தரும், பாவங்களைப் போக்கும் ரத சப்தமி தினம். இன்றைய நாளில் காலை எழுந்ததும் குளிக்கும் போது மறக்காம இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபட்ட பின்னர் உங்கள் குளியலைத் தொடங்குங்க. அதன் பின்னர் உங்கள் வாழ்வில் சுபிட்சம் கிடைப்பதைக் கண்கூடாக உணர்வீர்கள்.

அது சரி? அதற்கு முன்பாக ரத சப்தமி என்றால் என்ன? எதற்காக ரத சப்தமியன்று நாம் பூஜை செய்ய வேண்டும்? என்று மகாபாரத கதையை வெவ்வேறு மொழிகளில், கிராபிக்ஸ், கதை புத்தகங்கள், திரைப்படம், விஜய் டிவி சீரியல் என்று வெவ்வேறு வடிவங்களில் தெரிந்திருப்பீர்கள்.

மகாபாரதத்தில் பீஷ்மருக்காக, அவர் வாழ்ந்த காலத்தில் பூமியில் வாழ்ந்த அனைத்து மக்களும் செய்த செயலை நாம் இப்போது தொடர்கிறோம் என்ற எண்ணமே நம்மை பரவசமடையச் செய்யும்.

ரத சப்தமி நாளில் காலையில் குளிப்பதற்கு முன்பாக ஏழு எருக்க இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று இலைகளைத் தலையிலும், இரண்டு இரண்டு இலைகளைத் தோள்களிலும் வைத்து ஸ்லோகங்களைச் சொல்லி  நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிய பின்னர் ஸ்நானம் செய்ய வேண்டும். 

இதில் ஆண்கள் எருக்கன் இலைகளில் கொஞ்சம் விபூதியையும் பெண்கள் கொஞ்சம் மஞ்சள் பொடி அல்லது அட்சதை இட்டு நீராடுவது மிகவும் சிறப்பு. இவ்வாறு நீராடினால் நமது பாவங்கள் விலகி செல்வங்கள் சேரும், வீட்டில் சுபிட்சம் நிறையும் என்பது நம்பிக்கை.  பூஜை அறையில் சூரிய ரதக் கோலம் இடலாம். ரதக் கோலம் இடத் தெரியாதவர்கள் சாதாரணமாக வட்டங்களாக சூரிய சந்திரர்களை வரைந்து வழிபடலாம்.

சூரிய பகவானை நீராடியதும் தரிசனம் செய்து சர்க்கரைப்பொங்கலை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்யலாம். மேலும் வீடுகளில் ஆதித்ய ஹிருதயம் ஒலிக்கச் செய்து கேட்கலாம்.

ரத சப்தமி நாளில்  செய்ய வேண்டியவை :  

ஆண்கள் 7 எருக்க இலைகளை தலை, தோள்கள் மற்றும் பாதங்களில் வைத்து குளிக்க வேண்டும்.

பெண்கள் 7 எருக்க இலைகளில் மஞ்சள் மற்றும் அரிசி வைத்து தலை, தோள்கள் மற்றும் பாதங்களில் வைத்து குளிக்க வேண்டும்.

சூரிய பகவானின் 12 பெயர்களைச் சொல்லி, சூரிய பகவானுக்கு குறைந்தது 12 சூரிய நமஸ்காரங்களைச் செய்ய வேண்டும்.

தேரில் அமர்ந்திருக்கும் சூரிய பகவானின் புகைப்படத்திற்கு விளக்கேற்றி, சிவப்பு நிற மலர்கள் சாற்றி பூஜை செய்யலாம்.
கோவில்களில் நவக்கிரக சன்னதிகளில் உள்ள சூரிய பகவானுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்யலாம்.

சூரிய பகவானுக்கு உரிய ஆதித்ய ஹ்ருதயமும், சூரிய அஷ்டகம் மற்றும் சூரிய கவசம் போன்ற ஸ்டோத்திரங்களை பாராயணம் செய்யலாம்  

ரத சப்தமி நாளில்  கோதுமை , வெல்லம் கலந்து  இனிப்புடன் தயிர் சாதம் செய்து சூரியனுக்கு படையல் போடலாம். இதனால் சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்கும். ரத சப்தமி நாளில் காலை சூரியனை வழிபாட்டு, சூரிய பகவானுக்கு இனிப்பு வைத்து பூஜை செய்தால், ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தை வலுப்படுத்தும். உயர் பதவி, அதிகாரம், செல்வாக்கு உயரும்.

ரத சப்தமி

ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஸ்டமி. அதாவது இந்த பீஷ்மாஸ்டமி நாளில் தான் பீஷ்மர் முக்தி அடைந்தார். எனவே இந்த நாளில் நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம். அப்போது பீஷ்மருக்காகவும் வேண்டிக் கொள்வது மிகவும் விசேஷம்.

ஆன்மிகம் என்று இதையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்குபவர்களுக்காக, அறிவியல் ரீதியாக கணக்கிட்டால் இனி வர இருக்கும் காலம் கடும் கோடை காலம். எருக்கம் இலைகளை வைத்து நீராடும் போது கோடைக்காலத்தில் வரும் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம். சூரியன் ஆத்மகாரகன் என்பதால் சூரியபகவானை நினைத்துச் செய்யும் இந்த வேண்டுதல் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் சுத்தம் செய்து முன்வினைப்பாவங்களை நீக்குகிறது.

ரத சப்தமி 2025 தொடக்கம்: பிப்ரவரி 4, செவ்வாய் காலை 6:12 அன்று தொடங்குகிறது
ரத சப்தமி 2025 முடிவு: பிப்ரவரி 5, புதன் காலை 4:32 அன்று முடிகிறது

ரத சப்தமி

நீராடும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர ஸப்தமி
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி
தேவி, த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய!

என துதியை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நீராடுதல் வளம் தரும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web