இன்று சோமாவதி அமாவாசை... என்ன விசேஷம்? எப்படி வழிபடுவது?!

 
அமாவாசை தினத்தில் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!

இன்று சோமாவதி அமாவாசை. சோமாவதி அமாவாசையன்று என்ன விசேஷம்? எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள்? என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. மாதந்தோறும் அமாவாசையும், பெளர்ணமியும் வருகிறது என்றாலும் ஒவ்வொரு அமாவாசை திதியும் ஒவ்வொரு வகையான சிறப்புக்களைக் கொண்டுள்ளது.

குறிப்பாக சில மாதங்களில் வரும் அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை திதி மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. அப்படி ஆவணி மாதத்தில் வருகின்ற இந்த அமாவாசை திதியில் என்னென்ன சிறப்புக்கள் என்று பார்க்கலாம் வாங்க. 

அமாவாசை

இன்று செப்டம்பர் 2ம் தேதி ஆவணி மாதம் அமாவாசை, சிம்ம ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது. திங்கட்கிழமை அன்று இந்த அமாவாசை வருவதால் சோமாவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சோமாவதி அமாவாசை திதி தொடக்க நேரம்: 2 செப்டம்பர் 2024, காலை 5:21 மணிக்கு துவங்கி நாளை செப்டம்பர் 3ம் தேதி காலை 7:24 மணிக்கு, நிறைவடைகிறது. 

பொதுவாக, அமாவாசை நாளில் சிவ வழிபாடும், பௌர்ணமி நாளன்று அம்மன் வழிபாடும் செய்வது  சிறப்பு.  அதே போல, அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷத்தைப்  போக்கும். இந்த ஆண்டு 2024 ஆவணி மாத அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள், சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானது.

அமாவாசை
ஆவணி அமாவாசையான இன்று அதிகாலை 5 மணிக்கே தொடங்கி விடுவதால் நண்பகல் நேரத்துக்குள் அமாவாசைக்கு பித்ருக்களுக்கு திதி கொடுப்பதோ தர்ப்பணம் தருவதையோ செய்து முடிப்பது உத்தமம். சோமாவதி அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் இயன்றளவு  தானம் செய்யலாம். அமாவாசை நாளில் செய்யப்படும்  தானம் பல மடங்கு புண்ணியம் தரும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.  

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web