இன்று தை அமாவாசை... தர்ப்பண நேரத்தில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் எதற்காக உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் செய்கிற சில கடமைகளுக்கான பொருளையும், அர்த்தத்தையும் தெரிந்து கொண்டு செய்யும் போது அதற்கு முழுபலன்கள் உண்டு. மாதந்தோறும் அமாவாசை திதி வந்து சென்றாலும் சில அமாவாசை திதி விசேஷமானது. ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகிற அமாவாசை திதியைப் போலவே தை மாதத்தில் வருகிற அமாவாசை திதியும் மிக முக்கியமானது. தை மாதத்தில் தான் சூரியன் மகரத்தில் உச்சம் பெறுகிறது. அதனால் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரியன் தானே இந்த உலகத்திற்கு ஆதார ஸ்ருதி. அனைத்து கிரகங்களும் சூரியனைத் தானே சுற்றி வருகின்றன.
இன்றைய அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, முன்னோர்கள் நினைவாகவே பிரார்த்தனைகளையும் செய்ய வேண்டும். இன்றைய தினம் தர்ப்பணம் கொடுக்கும் வரை நம் வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது. முன்னோர்களை வரவேற்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்றி கூறி நமது வாழ்க்கை சிறக்க மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நம் பித்ருக்கள் மிகவும் சக்தி நிறைந்தவர்கள். அவர்களை இந்த அமாவாசையில் வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் சேரும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.
காலை 6.30 மணிக்குள் அல்லது மதிய வேளை அல்லது சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. அதே போல் தர்ப்பணம் கொடுக்கும் போது கோத்திரம், குலதெய்வம்,3 தலைமுறையின் பெயர்களைக் கூறி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!