இன்று தைப்பூசம்.. நாளை பெளர்ணமி... திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்!

 
கிரிவலம்

இன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று இரவு 7.51 மணிக்கு பெளர்ணமி திதி துவங்கி நாளை பிப்ரவரி 12ம் தேதி இரவு 8.12 மணி வரை உள்ளது. இந்த நேரம் பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிற்கு தலைவனான ஈசனே இங்கு மலையாக வீற்றிருப்பதாக சொல்லப்படுவதால் திருவண்ணாமலையைச் சுற்றி வலம் வந்து வணங்கினால், கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமாக கருதப்படுகிறது. சிவ பெருமானையே வலம் வந்து வணங்கும் பிரார்த்தனை என்பதால் இது தரும் புண்ணிய பலன்கள் மிக மிக அதிகமானதாகும்.

திருவண்ணாமலையில் அனைத்து மாதம், நாள், கிழமை, நேரம், நட்சத்திரம், திதி ஆகியவற்றிலும் கிரிவலம் செல்லலாம்.இருந்தாலும் பெளர்ணமி நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கிரிவலம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

கிரிவலம்

பெளர்ணமி என்பது சந்திரனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு நாளாகும். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் தான் ஒருவருடைய மனதுடன் தொடர்புடைய கிரகமாக கருதப்படுகிறார். அதாவது ஒருவர் நல்ல தெளிவான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சந்திரனின் அருள் மிக மிக முக்கியம். மன அழுத்தம், மன பதற்றம், பயம், மனக்குழப்பம், மனநிலை பாதிக்கப்படுதல் போன்ற அனைத்தும் சந்திரனின் நிலை பலம் இழந்து காணப்படுவதால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

பெளர்ணமி நாளில் சந்திரனின் கதிர்கள் மலை மீது பட்டு பிரதிபலிப்பதால் அந்த சமயத்தில் நாம் கிரிவலம் சென்றால் நம் மீது படுவதால் நம்முடைய மனதில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவடையும். மனநிலையில் ஏற்படும் மாற்றங்களால் நம்முடைய வாழ்க்கையில் பல விதமான மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி பெளர்ணமி நாளில் தான் சித்தர்கள், தேவர்கள், ரிஷிகள் ஆகியோர் சூட்சும வடிவில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவதாக நம்பிக்கை. அதனால் அவர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை

இந்த ஆண்டு பிப்ரவரி மாத பெளர்ணமி நாளை பிப்ரவரி 12ம் தேதி புதன்கிழமை வருகிறது. இது தை மாத பெளர்ணமியும் கூட. தை மாத பெளர்ணமி, பூச நட்சத்திரத்துடன் இணைந்து வருவது தான் வழக்கம். இதையே தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஆண்டு இன்று பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசத் திருநாளாகவும், நாளை பிப்ரவரி 12ம் தேதி பெளர்ணமி திதியாகவும் வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நேரம் குறித்த அறிவிப்பை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 11ம் தேதி இரவு 07.51 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 12ம் தேதி இரவு 08.12 வரை பெளர்ணமி திதி உள்ளது. திருவண்ணாமலையில் பிப்ரவரி மாத கிரிவலம் செல்ல நினைப்பவர்கள் இன்று பிப்ரவரி 11ம் தேதி மாலை 06.55 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 12ம் தேதி இரவு 07.22 மணிக்குள் நிறைவு செய்து விட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. புதன்கிழமை என்பது ஞானத்திற்குரிய நாளாகும். இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் கலைகளில் வளர்ச்சி, மோட்சம் ஆகியவை கிடைக்கும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!