வந்தாரை வாழ வைக்கும் பெருநகரம் -இன்று சென்னைக்கு 387-வது பிறந்த நாள்!

 
சென்னை டே

தென்னிந்தியாவின் நுழைவுவாயிலாகவும், கலாச்சார மற்றும் தொழில் துறை மையமாகவும் திகழும் சென்னை நகரம் இன்று தனது 387-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.

1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகிய ஆங்கிலேய அதிகாரிகள், உள்ளூர் நிலக்கிழார்களான வெங்கடப்பா மற்றும் அய்யப்பா நாயக்கர்களிடம் இருந்து வங்கக் கடலோரம் அமைந்த சிறிய நிலப்பகுதியை வணிகத்திற்காகப் பெற்றனர்.

நம்ம சென்னை

நிலம் வழங்கிய மன்னர்களின் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' நினைவாக அப்பகுதி 'சென்னப்பட்டினம்' என்றும், வடக்கே இருந்த கிராமங்கள் இணைந்து 'மதராசப்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டன.

1640-ல் ஆங்கிலேயர்களால் கட்டத் தொடங்கப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை மையமாக வைத்தே 'மெட்ராஸ்' நகரம் விரிவடைந்தது. 1688-ல் மெட்ராஸுக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் பழமையான முதல் நகராட்சி என்ற பெருமையை இது பெற்றது.

சிங்கார சென்னை 2.0′ திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

மெட்ராஸ் மாகாணம் 1969-ல் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டதை தொடர்ந்து, அதன் தலைநகரமான 'மெட்ராஸ்' 1996-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக 'சென்னை' என மாற்றப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி 'மெட்ராஸ் டே அல்லது 'சென்னை தினம்' என்ற பெயரில் பாரம்பரிய நடைபயணங்கள், புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.