இன்று தமிழ்நாடு உருவான நாள்!! களைகட்டிய போட்டிகளும், பரிசுகளும்!!

 
தமிழ்நாடு நாள்


1967 ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என சட்டசபையில் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18ஆம் தேதியன்று தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நாள்

அதன்படி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருச்சியில் இன்று "தமிழ்நாடு நாள்" தினம் கொண்டாடப்பட்டது. திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் "தமிழ்நாடு நாள்" எனும் வடிவில் பள்ளி மாணவ, மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு தினத்தையும் அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு நாள்

இதில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என முழக்கமிட்டவாறு வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரையிலும் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web