இன்று செல்வம் குவியும் வெள்ளி பிரதோஷம்... சுக்ரவார பிரதோஷ தினத்தில் விரதமிருப்பது எப்படி?!
இன்று செல்வ வளம் தரும் வெள்ளிக்கிழமை பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள் கர்வத்தால் தலை எது கால் எது என புரியாமல் ஆணவத்தில் ஆடிய போது சிவபெருமான் பிட்சாடனராக வந்து அவர்களுக்குப் பாடம் புகட்டினார்.
கர்வத்தைத் தொலைத்த ரிஷிகள், பிரதோஷ நாளில் கடும் தவமிருந்து, விரதம் மேற்கொண்டு சிவ பூஜைகளைச் செய்து முக்தி அடைந்தனர் என்கிறது புராணம். அதனால் தான் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமையைப் போலவே வெள்ளிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம் தனி மகத்துவம் வாய்ந்தது.

பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்வதால், சகல பாவங்களும் விலகி, சகல செளபாக்கியங்களும் பெற்று புகழோடு வாழலாம் என்பது ஐதிகம். பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை அள்ளித் தரும். இந்த பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடைபெறும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்கள் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜைக்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேகப் பொருட்களையும்,வில்வம், பூக்களை வழங்கலாம்.

இன்றைய தினம் மாலை 4.30 லிருந்து 6 மணி வரை சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கப் பெறலாம் என்கிறது சிவபுராணம்.
