இன்று கடைசி தேதி... நாளை முதல் சிலிண்டர் மானியம் பெற பயோமெட்ரிக் கட்டாயம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை!
Sep 30, 2026, 07:46 IST
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் தடையின்றித் தொடர்ந்து கிடைக்க, நுகர்வோர் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரப் பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

நாளைக்குள் (அக்டோபர் 1) ஆதார் சரிபார்ப்புப் பணியை முடிக்காத நுகர்வோருக்கு, மானிய விலையில் சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுவரை நாடு முழுவதும் சுமார் 90 சதவீத நுகர்வோர் தங்களது கேஒய்சி செயல்பாடுகளை வெற்றிகரமாக முடித்து விட்டதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மானியத் தொகை எங்குமின்றி நேரடியாக வங்கிக் கணக்கில் தொடர்ந்து வரவுசேர, நுகர்வோர் முன்கூட்டியே இந்த ஆதார் அங்கீகாரத்தை நிறைவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
