இன்று கடைசி தேதி... நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இதெல்லாம் கண்டிப்பாக தேவை - முழு செக் லிஸ்ட்!

 
நீட் நீட்

மறந்துடாதீங்க. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மார்ச் 8ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் எல்லாம் தேவை என்று ஒரு முறை உங்க செக் லிஸ்ட்டை சரிபார்த்துக்கோங்க. இன்று இரவு 11:50 மணி வரை மட்டுமே ஆன்லைன் மூலம் நீட் நுழைவு தேர்வுக்கான கட்டணம் செலுத்து முடியும். 

முதுகலை நீட் தேர்வு

எப்படி விண்ணப்பிப்பது?

தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in/NEET அல்லது neet.ntaonline.in என்ற பக்கத்திற்குச் செல்லவும். புதிய பதிவை (New Registration) செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். தேவையான ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம், கைரேகை) பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்:

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம். கையொப்பம் (வெள்ளைத்தாளில் கருப்பு மையினால் இடப்பட்டது).

இடது மற்றும் வலது கை விரல் ரேகைகள். ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை.

தேர்வு தேதி:

நீட் (NEET UG) 2026 தேர்வு வரும் மே 3, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.