இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்... மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இறுதிப் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இதனைத் தொடர்ந்து களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் இன்றுடன் நிறைவடைவதால், இறுதி நிலவரம் தெரியவருகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளிலும் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் பரிசீலனைக்குப் பிறகு 28 வேட்பாளர்களின் மனுக்களும், தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், எந்தெந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இறுதிப்போட்டியில் களத்தில் உள்ளனர் என்ற முழு விவரம் உறுதியாகியுள்ளதுடன், தேர்தல் களமும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
