இன்றே ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி நாள்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
வருமான வரி

 ஏப்ரல் 1,2022  முதல் மார்ச் 31, 2023  வரையிலான வருமான வரி கணக்குகளை வருமான வரி செலுத்துபவர்கள் இன்று ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே கடைசி நாள் என்பதால் வருமான வரி கணக்கு தாக்கல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-2023 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக   தகவல் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை 88 சதவீதம் அதாவது 4.46 கோடி கணக்கு வழக்குகள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன.

வருமான வரி


இன்று ஜூலை 31 கடைசி நாள் என்பதால் வருமான வரித்துறையினருக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களை   தீர்க்கும் வகையில் வருமானவரித்துறையினர் உதவி மையங்கள் சனி , ஞாயிறுகளில் கூட நடத்தப்பட்டது.  ஒருவர் தங்கள் ITR தாக்கல் செய்வதை தவறவிடுவது நல்லதல்ல என்றாலும், காலக்கெடுவிற்கு முன் யாராவது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால், அவர்கள் 50-200 சதவிகித வரி நிலுவைத் தொகையுடன் தாமதமாகத் தாக்கல் செய்யலாம், ஆனால் இழப்புகளை திரும்பப் பெறவோ அல்லது வழக்குத் தொடரும் நோட்டீஸ்களைத் தவிர்க்கவோ முடியாது.  

வருமான வரித்துறை
வரி செலுத்துவோர் தங்கள் ITR ஐ தாக்கல் செய்யவில்லை எனில்  இந்த நிதி   ஆண்டில் ஏற்படும் இழப்பை திரும்ப பெற முடியாது.மேலும்,வருமான  வரி செலுத்துபவர்கள்,   தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், குறைவான வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வரியின் 200 சதவீதம் அபராதம்  செலுத்த வேண்டும். இதன் பிறகு , வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பும். இதன்  பிறகும் ரிட்டன் தாக்கல் செய்யத் தவறினால், ஒருவேளை வழக்கையும் சந்திக்க நேரிடலாம்.
குளறுபடிகளைத் தவிர்க்கவும் மற்றும் அனைத்து வரி விவரங்களும் காலக்கெடுவுக்குள் துல்லியமாக அறிவிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஜூலை 31ம் தேதிக்குள் ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரி செலுத்துபவர்களை  வருமான வரித்துறை வலியுறுத்தி வந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web