இன்றே கடைசி... TET தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

 
டெட்


 
ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு  2025-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.   விண்ணப்பங்கள் இன்று மாலை 5 மணியுடன் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையலாம்.  இந்தத் தேர்வு, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானது.  

டெட்
TET தேர்வு, ஆசிரியர் பணியில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறுவதற்கு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும்.   பேப்பர் 1 (முதல் நிலை – 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு) மற்றும் பேப்பர் 2 (இரண்டாம் நிலை – 6 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு). விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி மற்றும் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ. 500 மற்றும் பிற பிரிவினருக்கு ரூ. 250 ஆகும்.இந்த ஆண்டு TET தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

டெட்

தேர்வு நடைமுறைகள் மற்றும் வினாத்தாள் வடிவம் குறித்த விவரங்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள், பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 5 மணிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 2025-ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.