இன்று யமதீபம் ஏற்றும் முறை, நேரம், வழிபாடு, பலன்கள்... !!

தீபாவளி பண்டிகை நாலை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்பு வரும் திரையோதசி நாளில் மாலை எமதர்ம ராஜாவை வழிபட வேண்டும்.இந்த வழிபாடு செய்வதன் மூலம் அறியாமல் செய்த பாவங்களும், யம பயமும் விலகும் என்கின்றன நம் புராணங்கள்.
வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ஒரு மண்அகல்விளக்கு அவரவர்கள் ஏற்ற வேண்டும். இந்த தீபங்களை வீட்டு வாசலில் அல்லது ஆலயங்களிலோ ஏற்றி வைக்கலாம்.மஹாளய அமாவாசைக்கு பூமிக்கு வந்த நமது முன்னோர்கள் பயணப்பட தொடங்கியிருப்பர்.
அவர்களுக்கு வெளிச்சம் காட்டுவதற்காக ஏற்றப்படுவது இந்த “யம தீபம்” மட்டுமே. நம் வீடுகளில் துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமாக ஏற்றப்பட வேண்டும். மாலை நேரத்தில், வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
தெற்கு நோக்கி நல்லெண்ணெய் விட்டு இந்த அகல் விளக்குகள் ஏற்றிப்படுவது மிகவும் சிறப்பு. அந்த நேரத்தில் நமது முன்னோர்களை மனதில் பிரார்த்தனை செய்து தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இந்த யமதீபத்தை வீட்டின் உயரமான பகுதியில் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் தெற்கு திசை நோக்கி விளக்கு எரியும் வகையில் அமைக்க வேண்டும்.
விளக்கேற்றியதும் முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திப்பது நன்மை தரும். அதன் பிறகு பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
நடப்பாண்டில் திரயோதசி திதி இன்று நவம்பர் 10ம் தேதி பிற்பகல் 12.59க்கு தொடங்கி மறுநாள் நவம்பர் 11 ம் தேதி பிற்பகல் 02:18 வரை உள்ளது. எனவே அன்றைய தினம் விளக்கேற்றுவது மிக பொருத்தமானது. ஏற்றும் விளக்கை நாமாக அணைக்காமல் தானாக அணைய விட வேண்டியது அவசியம்.