இன்று ’விடாமுயற்சி’ டிரைலர்.... ஜனவரி 23 ரிலீஸ்? உற்சாகத்தில் ரசிகர்கள்!

 
விடாமுயற்சி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது குடியரசு தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'. இந்த திரைப்படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனத் தயாரிப்பில் உருவான இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை. இதனையடுத்து 'விடா முயற்சி' ஜனவரி  23ம் தேதி வெளியாக உள்ளதாகவும், இது குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.  

விடாமுயற்சி

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்து  திரைப்படத்தின் டிரெய்லர் இன்று  ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!