இன்று செல்வத்தை ஈர்க்கும் புதவாரப் பிரதோஷம்!

 
இன்று செல்வத்தை ஈர்க்கும் புதவாரப் பிரதோஷம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து வரும் திரயோதசி திதியில் பிரதோஷம் அனுஷ்டிக்கப் படுகிறது. சிவபெருமானை வழிபடவும் நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் அவரை பிரதோஷ நாளில் வழிபடலாம். அந்த வகையில் புதன் கிழமை பிரதோஷ நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவிசாய்ப்பதாக ஐதிகம்.

இன்றைய தினம் மாலையில் சிவ ஆலயம் சென்று அபிஷேக பொருட்களை வழங்கி இறைவனை தரிசித்து வர வீட்டில் கடன் தொல்லைகள் நீங்கி 16 வகை செல்வங்கள் கிடைக்கப் பெறலாம். வீட்டில் சுபிட்சம் நிலவும். குழந்தைப்பேறு கிடைக்கும். பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று செல்வத்தை ஈர்க்கும் புதவாரப் பிரதோஷம்!

இன்றைய தினத்தில் சிவபெருமானுடன் நந்தியையும் தரிசித்து வில்வம் , அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இயன்ற அளவு வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம். பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்றார். அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டுக் களிப்பதாக ஐதிகம்.

இன்று செல்வத்தை ஈர்க்கும் புதவாரப் பிரதோஷம்!

பிரதோஷ வேளையான மாலை நேரத்தில் வீட்டில் இருந்த படியே ‘ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க இதுவரை முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுவதை அனுபவ பூர்வமாக உணரலாம். இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

From around the web