இன்று திருக்கல்யாணம்... கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்வது எப்படி? முழு வழிபாட்டு முறை!

 
கந்த சஷ்டி விரதம் சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம் முடிந்து இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முருகப்பெருமானின் பேரருளைப் பெற பக்தர்களால் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் கந்த சஷ்டி விரதத்தின் உச்சக்கட்ட நிகழ்வான 'சூரசம்ஹாரம்' நிறைவடைந்ததும், விரதத்தை எப்போது, எப்படி முடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் ஆன்மிக மரபுகளில் கூறப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் முருகன் முருகர்

அவரவர் குடும்ப வழக்கங்கள் மற்றும் கோயில் ஆகம முறைகளுக்கு ஏற்ப விரதத்தை நிறைவு செய்வது வழக்கம். சில பகுதிகளில் சூரசம்ஹாரம் நிறைவடைந்த அன்றிரவே முருகப்பெருமானை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

பெரும்பாலான இடங்களில் சஷ்டி விரதத்தின் நிறைவு நாளான இன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைத் தரிசித்து விட்டு, அதன் பின்னரே விரதத்தை முடிப்பது பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது. இது தான் சரியான முறையும் கூட. கந்தசஷ்டி விரதம் என்பது 6 நாட்கள் விரதம் கிடையாது. 7 நாட்கள் விரதமுறை தான் காலங்காலமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

முருகன்

தொடர்ந்து இப்படி ஏழு நாட்கள் கடுமையான விரதம், உண்ணாநோன்பு இருந்தவர்கள், விரதத்தை முடிக்கும் போது உணவுப் பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். திடீரெனக் கனமான அல்லது எண்ணெய் பதார்த்தங்களை உண்பதைத் தவிர்த்து விட்டு, எளிதில் செரிக்கக்கூடிய மோர், கஞ்சி அல்லது இலேசான சாப்பாடு போன்றவற்றைச் சிறிய அளவில் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்வது உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது.