இன்று மாசி செவ்வாய்... வீடு, மனை யோகம் கிடைக்க இதைச் செய்ய மறக்காதீங்க!
Feb 24, 2026, 05:30 IST
மாசி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் ஆன்மிக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்தவை. பொதுவாகச் செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்கும், முருகப் பெருமானுக்கும், சக்தி தேவிக்கும் உரிய நாளாகும். மாசி மாதத்தில் இந்தத் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி முருகப் பெருமானை வழிபட வேண்டும். செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் என்பதால், இந்நாளில் ரத்த சம்பந்தமான உறவுகளிடையே ஒற்றுமை பலப்படும். வீடு, மனை வாங்குவது தொடர்பான சிக்கல்கள் இருப்பவர்கள் மாசி செவ்வாயன்று அங்காரகனை வழிபடுவது சிறந்தது.

இன்றைய வழிபாடு நீண்ட நாள் தீராத கடன் தொல்லைகள் நீங்கும். சகோதரர்களுக்குள் நிலவி வந்த மனக்கசப்புகள் மறைந்து ஒற்றுமை பிறக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
