இன்று 17 மாவட்டங்களுக்கு அலெர்ட்!! குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

இன்று மே26ம் தேதி வெள்ளிக்கிழமை  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர். பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே 27ம் தேதி தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.  நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.  மே 28ம் தேதி தமிழகம் , புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

5 மாவட்டங்களில் கன மழை

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 28 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாக இருக்கும்.

மழை

இன்று  மே26ம் தேதி வெள்ளிக்கிழமை  முதல் மே 28 வரை தமிழகத்தின் கடலோர பகுதிகள்,  மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனையடுத்து மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இன்று காலை தாம்பரம், வேளச்சேரி, பெருங்களத்தூர் என சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

From around the web